வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணி தொடர்பான சிறப்பு முகாமை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2022-11-27 18:45 GMT

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணி தொடர்பான சிறப்பு முகாமை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:- இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 1.1.2023-ம் தேதியினை தகுதிநாளாக கொண்டு வாக்காளா் பட்டியலில் சோ்த்தல் மற்றும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்களுக்கு தேவையான முகவரி மாற்றம், பிழை திருத்தம், புகைப்பட மாற்றம், மாற்று வாக்காளா் அடையாள அட்டை போன்றவைகளை மேற்கொள்ளவும், இடம் பெயா்ந்த மற்றும் இறந்த வாக்காளா்களை வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்குதல் தொடர்பான சிறப்பு சுருக்க திருத்த பணிகள் கடந்த 9.11.2022 முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்திலுள்ள 1,354 வாக்குச்சாவடிகளில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை செய்து பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார். நேற்று 2-வது நாளாக இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் உள்ள பாபா பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் திருப்பத்தூர் பேரூர் செயலாளர் இப்ராம்ஷா, முருகேசன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பிரேம்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் ராஜா முகமது மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதே போல் காரைக்குடி நகர் மகரிஷி பள்ளி, ராமநாதன் நகராட்சி பள்ளியில் நடைபெற்ற முகாமையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இளையான்குடி

இளையான்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரக்குறிச்சி, பெருமச்சேரி, குனப்பனேந்தல், வழக்காணி, சிறுபாலை உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான சுப.மதியரசன் ஆய்வு செய்தார்.

இதில், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, ஒன்றிய துணை செயலாளர் சிவனேசன், மாவட்ட பிரதிநிதி உதயசூரியன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், அவைத் தலைவர் பெரியசாமி, துணை செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன், முகவர்கள் நீரா.கண்ணன், மெக்கேல் சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்