முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-21 18:45 GMT

கமுதி, 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.

குருபூஜை

கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் வருகிற 28-ந் தேதி ஆன்மிக விழாவாகவும், 29-ந் தேதி அரசியல் விழாவாகவும், 30-ந் தேதி 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் நிர்வாகிகள், ம.தி.மு.க. சார்பில் வைகோ, பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி முருகன், சந்திரசேகரன், தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில தலைவர் அண்ணாமலை, மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் கதிரவன், முன்னாள் அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு பசும்பொன்னில் செய்யப்படும் முன்னேற்பாடுகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். அவருடன் நவாஸ் கனி எம்.பி., கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அமைச்சர் ஆய்வு

முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்வதற்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆலோசனை வழங்கினார். முன்னதாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சமாதிக்கு வந்த அவரை நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் மற்றும் பழனி தங்கவேல் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் தேவரின் சமாதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தேவர் வாழ்ந்த வீடு, புகைப்படம், தியான மண்டபம், தேவரின் பூஜை அறையை அமைச்சர், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:- பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை அமைதியாக சிறப்பாக நடத்துவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இங்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தேவரின் நினைவிடம் முன்பாக தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. அதை நிரந்தர பந்தலாக அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளேன் என்றார்.

கலந்துகொண்டவர்கள்

ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் மாவீரன் வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், மாவட்ட கவுன்சிலர்கள் வாசுதேவன், சசிகுமார் போஸ், பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தணிக்கொடி, கமுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பழக்கடை ஆதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாக்கு வட்டி நகரத்தினம், நகரத்தான்குறிச்சி கண்ணன், ஆனையூர் காவடி முருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், கமுதி நகர செயலாளர் பாலமுருகன், பார்த்திபனூர் சேது தினகரன், கமுதி யூனியன் சேர்மன் தமிழ் செல்வி போஸ், துணை தலைவர் அய்யனார் உள்பட பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்