கடைகளில் தொழிலாளர் நலத்துறையினர் திடீர் ஆய்வு
கடைகளில் தொழிலாளர் நலத்துறையினர் திடீர் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஜவுளிக்கடைகள், இனிப்பு கடைகள் மற்றும் பட்டாசு கடைகளில் ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் பாரி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அறிவிப்புகள் இல்லாமலும், அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனைக்கு வைத்திருந்த பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதன்படி கடை நிறுவனங்களின் சட்டத்தின்படி 20 கடை உரிமையாளர்களுக்கும், சட்டமுறை எடையளவு சட்டத்தின்படி 12 கடை உரிமையாளர்களுக்கும், பொட்டல பொருட்கள் விதியின் கீழ் 19 கடை உரிமையாளர்களுக்கும் இசைவு தீர்வு கட்டண அறிவிப்பு வழங்கப்பட்டது. இந்த தகவலை ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாரி தெரிவித்தார்.