பெண்ணை உயிரோடு மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை உயிரோடு மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு

Update: 2022-11-29 20:52 GMT

குலசேகரம்,

திருவட்டார் அருகே பாரதப்பள்ளியை சேர்ந்தவர் புஷ்பபாய் (வயது 60). இவர் கடந்த 10-ந் தேதி கோதையாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரை 24 மணி நேரத்திற்கு பின்னர் திக்குறிச்சி பகுதியில் ஆற்றிலிருந்து உயிருடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

பெண்ணை உயிரோடு மீட்ட தீயணைப்பு படை வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் நடந்தது. இதில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை தென்மண்டல துணை இயக்குனர் நா.விஜயகுமார் கலந்து கொண்டு, குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் (போக்குவரத்து) செல்வ முருகேசன் மற்றும் வீரர்கள் ஜெகதீஸ், கோட்டை மணி, நிஜல்சன், அஜின், மாரி செல்வம், கபில் சிங், பைஜூ மற்றும் படகை இயக்கிய சுஜின் ஆகியோரை பாராட்டி விருது வழங்கி கவுரவித்தார்.

அப்போது மாவட்ட தீயணைப்பு அலுவலர் ச.சத்தியகுமார், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் இம்மானுவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்