கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2022-08-03 17:43 GMT

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகள் சாவித்திரி. இவர் வழக்கம் போல் காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டார். மாலையில் மாடுகள் அனைத்தும் வந்தநிலையில் ஒரு கன்று குட்டி மட்டும் வீடு திரும்பவில்லை. அதை தேடிய போது அப்பகுதியை சேர்ந்த அமீர் அம்சா என்பவருக்கு சொந்தமான சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் அங்கு சென்று கயிறுமூலம் கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்