கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2022-07-19 17:01 GMT

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்சுதீன். இவருடைய மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றது. அதில் ஒரு கன்றுக்குட்டி மட்டும் அதே பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவருக்கு சொந்தமான சுமார் 100 அடி ஆழம் கொண்ட தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் கிருஷ்ணகுமார் தலைமையிலான மீட்பு படையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்