நெல்லையில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட யானை மீட்பு

நெல்லையில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட யானையை அதிகாாிகள் மீட்டனர்.

Update: 2023-04-06 20:07 GMT

கடலூரை சேர்ந்தவர் கவுதம் ராஜா. இவர் சுந்தரி என்ற பெண் யானையை வளர்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் அந்த யானையை நிறுத்தி வைத்து நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்றார். ஆனால் அந்த யானை பார்வை திறன் குறைந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் வனத்துறையிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவிட்டார். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், மருத்துவ குழுவினர் சுந்தரி யானைக்கு பரிசோதனை செய்தனர். அப்போது யானைக்கு 67 வயது ஆகி விட்டதால், 1 கண்ணில் முழுமையாகவும், மற்றொரு கண்ணில் பாதி அளவுக்கும் பார்வை திறன் குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த யானை மீட்கப்பட்டு திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு சென்றனர். அந்த யானையுடன் பாகனையும் அழைத்து சென்றனர். அங்கு யானையின் உடல் நலனை பேணுவதற்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்