ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு மீட்பு
தென்காசி அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு மீட்கப்பட்டது.;
தென்காசி அருகே ஆய்க்குடியில் ஒரு தோட்டத்தில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு, ஆடு ஒன்றை பாதி விழுங்கிய நிலையில் நகர முடியாமல் போராடிக் கொண்டிருந்தது.
தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் கணேசன், சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜெயரத்தினகுமார், ஜெயபிரகாஷ், பாபு, வீரர்கள் விஸ்வநாதன், வெள்ள பாண்டியன், முகமது அனிபா ஆகியோர் விரைந்து சென்று லாவகமாக மலைப்பாம்பை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பாம்பு தான் விழுங்கிய ஆட்டை வெளியே துப்பி விட்டது. எனினும் அந்த ஆடு ஏற்கனவே இறந்து இருந்தது. பின்னர் தீயணைப்பு படையினர் பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.