கிணற்றில் விழுந்த புள்ளிமான், மயில் மீட்பு
கிணற்றில் விழுந்த புள்ளிமான், மயில் மீட்பு
மேலூர்
மேலூர் அருகே மதுரை நான்கு வழிச்சாலை முனிக்கோவில் பகுதியில் உள்ளது எஸ்.கல்லம்பட்டி. இங்கு விவசாய கிணற்று தண்ணீரில் 4 வயது ஆண் புள்ளி மான் ஒன்று விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்தது.
இதனை பார்த்த இளைஞர்கள் செல்வக்குமார், அப்துல் வாசிக், அஜித்குமார் ஆகியோர் கிணற்றில் குதித்து உயிருக்கு போராடிய புள்ளி மானை மீட்டனர். அதன் பின் வன இலாகாவினருக்கு தகவல் தரப்பட்டது.
அதே நேரத்தில் கல்லம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம் அரசு விதைப்பண்ணை கிணற்றில் ஆண் மயில் ஒன்று விழுந்துவிட்டது. அதனை மேலூர் தீயணைப்பு துறையினர் மீட்டனர். தகவல் கிடைத்து வந்த வன இலாகாவினர் உயிருடன் மீட்கப்பட்ட புள்ளி மான் மற்றும் மயிலையும் மதுரைக்கு கொண்டு சென்றனர்.