கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு
பரமக்குடி அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்கப்பட்டு உள்ளது.;
பரமக்குடி,
பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர், ஊரக்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் சுற்றித் திரிகின்றன. தண்ணீர் குடிக்கவும் இரை தேடியும் அருகில் உள்ள கிராமங்களுக்கு மான்கள் வருவது வழக்கம். அதன்படி பரமக்குடி அருகே உள்ள ஊரக்குடி கிராமத்திற்கு வந்த ஒரு புள்ளிமான் வழியில் இருந்த வற்றி போன கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி தீயணைப்பு வீரர்கள் குணசேகரன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து கிணற்றுக்குள் விழுந்து தவித்துக் கொண்டிருந்த மானை உயிருடன் மீட்டனர். பின்பு அந்த மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.