கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு

கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு

Update: 2022-11-14 21:08 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் பறக்கிங்கால் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே நேற்று காலையில் ஒருவர் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது இறந்து கிடந்தவர் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த அருண் (வயது 52), அதே பகுதியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி அருண் இறந்தாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அருணுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்