குன்னூரில் தபால் நிலைய கழிவறையில் சிக்கிய காட்டெருமை மீட்பு
குன்னூரில் தபால் நிலைய கழிவறையில் சிக்கிய காட்டெருமை மீட்பு
ஊட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதியில் சமீப காலமாக காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் பேரக்ஸ் பகுதியில் உள்ள தபால் நிலைய கழிவறைக்குள் காட்டெருமை ஒன்று சிக்கியது. இதனை கவனித்த தபால் ஊழியர்கள் இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, கழிவறையில் சிக்கிய காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு காட்டெருமை மீட்கப்பட்டது. இதையடுத்து தானாகவே அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.