கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் மீட்கப்பட்டார்.;

Update: 2023-08-24 19:00 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 27). இவர் ஊருக்கு தென்புறம் உள்ள ஒருவரது கிணற்று தடுப்புச்சுவரில் அமர்திருந்த போது திடீரென்று நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் தீயணைப்பு துறையினர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி படுகாயங்களுடன் இருந்த நடராஜனை மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags:    

மேலும் செய்திகள்