கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

சங்கரன்கோவிலில் கிணற்றில் விழுந்த மயில் மீட்கப்பட்டது.

Update: 2023-04-11 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒரு மயில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர். கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த மயில் வனப்பகுதியில் விடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்