அஞ்சுகிராமம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்பு
அஞ்சுகிராமம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி,
அஞ்சுகிராமம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்கப்பட்டது.
மயில் மீட்பு
அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவர் பழவூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்துள்ள ஜேம்ஸ் டவுனில் உள்ளது. இந்த தோட்டத்திலுள்ள கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின்பேரில் பூதப்பாண்டி வனசரகர் ரவீந்திரன் மேற்பார்வையில் வனகாவலர் விபின்ராஜ், விஜய்நிதி ஆகியோர் அங்கு சென்று கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மயிலை உயிருடன் மீட்டனர். பின்னர் அதை வனப்பகுதியில் விட்டனர்.