கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்கப்பட்டார்.

Update: 2023-07-04 19:56 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே உள்ள பண்டாரகுளத்தைச் சேர்ந்தவர் சவரிமுத்து. விவசாயியான இவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் 90 அடி ஆழமுடைய தண்ணீர் உள்ள கிணற்றில் தூர்வாரும் பணியை மேற்கொண்டார். இந்த பணியில் வள்ளியூர் அருகே உள்ள நம்பியான்விளையைச் சேர்ந்த தொழிலாளியான சேர்மத்துரை (வயது 32) என்பவர் கிணற்றில் கயிறு மூலம் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சேர்மத்துரை நிலை தடுமாறி தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தண்ணீரில் தத்தளித்து கூச்சலிட்டார். அப்போது அருகில் உள்ளவர்கள் உடனடியாக வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி சேர்மத்துரையை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அவர் வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்