கன்னியாகுமரியை அடுத்த தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாஸ் (வயது 30). இவருக்கு சொந்தமான நாய் தெற்கு குண்டல் மெயின் ரோடு அருகில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து விட்டது.
இதனை பார்த்த சிலர் கிணற்றில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இதுதொடர்பாக கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூடையை போன்று வலையை விரித்து அந்த நாயை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.