கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த மாடு மீட்பு
திசையன்விளையில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த மாடு மீட்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை செல்வமருதூர் யாதவர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 48). இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று மாலை கருப்பசாமி கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது. அந்த கால்வாய் குறுகலாக இருந்ததால் மாடு வெளியே வரமுடியாமல் தவித்தது. இதுகுறித்து திசையன்விளை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கயிற்றால் கட்டி மாட்டை மீட்டனர்.