குன்னூரில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமை மீட்பு
குன்னூரில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமை மீட்பு
குன்னூர்
குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் வெயில் அதிகரித்து உள்ளதால் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியிலும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவிற்கு தட்டுபாடு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் தினசரி குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் அருகேயுள்ள மாணிக்கம் பிள்ளை தோட்டம் குடியிருப்பு பகுதியில் காட்டெருமை ஒன்று உணவு தேடி வந்தது. இரவு நேரம் என்பதால் அந்த காட்டெருமை அங்கிருந்த 9 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து தத்தளித்து கொன்டு இருந்தது. நேற்று காலை 6 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் இதனை கவனித்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து உடனடியாக குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர்் அங்கு வந்து, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தத்தளித்த காட்டெருமையை 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர். இதையடுத்து அந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.