செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம்

Update: 2023-04-06 15:54 GMT


தமிழகம் உள்பட நாடு முழுவதும் பெரும்பாலான மக்களுக்கு போதிய அளவு இரும்புசத்து இல்லாமல் இருப்பதை மத்திய அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக ரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர். தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் புழுங்கல் அரிசி, பச்சரிசியில் மாவுச்சத்து, புரதசத்துக்கள் உள்ளன. இரும்புசத்து கிடைக்க ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப்படுகிறது.

போலிக் அமிலம், வைட்டமின் 12, இரும்புசத்து ஆகிய சத்துக்கள் கலந்த கலவை அரிசியில் சேர்க்கப்படுகிறது. 100 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ என்ற வீதத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் ரேஷன் கடைகளில் தொடங்கியது. திருப்பூர் மாநகரில் அரண்மனைப்புதூர் ரேஷன் கடையில் செறிவூட்டப்பட்ட அரிசி நேற்று வினியோகம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் 1,185 பகுதி நேர, முழுநேர ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்