திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை சார்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் நேற்று திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஒரு வீட்டின் அறையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. அங்கு மூட்டைகளில் இருந்த 175 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான விக்டர் (வயது 43) என்பவரை பிடித்தனர். விசாரணையில் அவர், சாமுண்டிபுரம் பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து வாங்கி பதுக்கி வைத்து, பின்னர் வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விக்டரை கைது செய்தனர்