பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி

பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி;

Update: 2023-02-06 12:41 GMT

திருப்பூர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற (ஏ.எம்.சி.ஏ.டி.) பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதம் ஆகும். இந்த பயிற்சியை பெற அனைத்து செலவினமும் தாட்கோவால் வழங்கப்படும்.

இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஏ.எம்.சி.ஏ.டி. தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம். இந்த பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்