நோயால் அவதிப்படும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்க கோரிக்கை

அரியலூர் நகரில் நோயால் அவதிப்படும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-05 18:30 GMT

அரியலூர் நகரில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். தற்போது அரியலூரில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் தனியாக வெளியே வர முடியவில்லை. அதேபோன்று இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டிக் கொண்டு செல்வதால் பலர் கீழே விழுந்து விடுகின்றனர்.

இந்தநிலையில் தெருநாய்களுக்கு ஒரு விதமான நோய் தாக்கி வருவதால் அதன் நிறம் வெண்மையாக மாறி உடலில் பல்வேறு இடங்களில் ரத்தம் வெளியேறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயால் அவதிப்படும் நாய்களை கண்டறிந்து அவற்றுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்