பாணாவரம் ஏரியிலிருந்து தண்ணீர் விரயமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பாணாவரம் ஏரியிலிருந்து தண்ணீர் விரயமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவேரிப்பாக்கம்
பாணாவரம் ஏரியிலிருந்து தண்ணீர் விரயமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள ஏரி சுமாா் 25 ஏக்கா் பரப்பளவு கொண்ட பிரமாண்ட ஏரியாகும். இந்த ஏரிக்கு முறையான நீா்வரத்து கால்வாய்கள் இல்லததால் ஏரி பல ஆண்டுகளாக வறண்ட நிலையிலேயே காணப்பட்டது. எனினும் கடந்த 2 ஆண்டுகளாக பெய்த பலத்த மழை காரணமாக ஏரி நிரம்பி கடல் போல் மாறியது. அதனால் சுற்றுப்புற பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததோடு கிணறுகளிலும் தண்ணீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இதனிைடயே சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு விரைவுச்சாலை பாணாவரம் வழியாக அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைதுறை இப்பகுதியில் இருந்த விளை நிலங்களை கையகப்படுத்தி விரைவு சாலை பணிகளை விரைந்து முடித்திட அதற்கான பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் பாணாவரம் ஏரியில் இருந்து முன்னிறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டது. இது குறித்து அறிந்த இப்பகுதி மக்கள் தண்ணீர் அதிகம் வெளியேறினால் குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றும் எனவே கன்மாயை உடனடியாக மூடவேண்டும் எனவும்வருவாய் துறையிருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அதிகாரிகள் அங்கு பணியாளா்களுடன் வந்து கண்மாயை மூட முயற்சித்தும் முடியாமல் போனது.அதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் மணல் மூட்டைகள் கொண்டு தண்ணீர் வெளியேறுவதை தடுத்துள்ளனா்.
எனினும் தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறது. அதனை முறையாக தடுத்து குடிநீா் ஆதாரமாக விளங்கும் தண்ணீ்ரை பாதுகாத்து கொடுக்கவேண்டும் என இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.