தூத்துக்குடியில் இருந்துகோவைக்கு இரவுநேர ரெயில் இயக்க கோரிக்கை

தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு இரவு நேர ரெயில் இயக்க வேண்டும் என்று மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-09-07 11:33 GMT

தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு இரவு நேர ரெயில் இயக்க வேண்டும் என்று மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம் சென்னை தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

கோவை ரெயில்

தூத்துக்குடி-கோவை இரவு நேர ரெயில் மற்றும் நெல்லை-பாலக்காடு பாலருவி ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தற்போது குருவாயூர், கோவை ரெயிலுக்கு தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்புக்கு இணைப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தூத்துக்குடி பயணிகளுக்கு எந்தவித பலனும் இல்லை. தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது கன்னியாகுமரி-சென்னை-கன்னியாகுமரி விரைவு ரெயில் என்று தூத்துக்குடி பிட்லைனில் பராமரித்து ஓடிக் கொண்டு இருக்கிறது. கன்னியாகுமரி-சென்னை ரெயிலின் பராமரிப்பு பணிகளை நாகர்கோவில் சந்திப்புக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

பராமரிப்பு

தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணியை வாரத்தில் 3 நாட்கள் தூத்துக்குடியில் பராமரிக்க வேண்டும், மீதம் உள்ள நாட்களில் நெல்லை-பாலக்காடு விரைவு ரெயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். இந்த பாலருவி விரைவு ரெயிலை வைத்து தூத்துக்குடி-கோவை இரவு நேர ரெயில் இயக்க வேண்டும். இல்லையென்றால் தினசரி மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தூத்துக்குடியில் பிட்லைன் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தூத்துக்குடி-கோவை இரவு நேர ரெயில், தூத்துக்குடி-பாலக்காடு விரைவு ரெயிலை அக்டோபர் 1-ந் தேதி முதல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்