சேதமடைந்த கண்மாய் கலுங்கை சீரமைக்க கோரிக்கை
ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த கண்மாய் கலுங்கை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள விளத்தூர் கிராமத்தில் பெரிய பாசன கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கலுங்கு, மடை போன்றவை கட்டி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் இவைகள் அனைத்தும் இடிந்து விட்டன. மொத்தம் 4 மடைகளில் 3 மடைகள் முழுவதும் இடிந்து கிடக்கிறது.இதனால் மழை பெய்தாலும் போதிய தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. எனவே சேதமடைந்த கண்மாய் கலுங்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.