வாய்க்கால்களை சீரமைக்க வேண்டுகோள்
வாய்க்கால்களை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி அருகே உள்ள அளவேரியில் பருவமழை காலங்களில் நிரம்பும் தண்ணீரை வைத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெல் பயிரிட்டு வந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பகுதியில் உள்ள நீர்வரத்து வாய்க்கால் சரியாக இல்லாததால், தண்ணீர் வரத்து இல்லாததால் நெல் பயிரிட முடியாமல் போனது. பருவமழையும் காலம் கடந்து பெய்து வருவதால் சரியான நேரத்தில் பயிர் செய்ய முடியவில்லை. எனவே இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.