சேதமடைந்த நூலகத்தை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த நூலகத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-18 19:15 GMT

தாயில்பட்டி, 

தாயில்பட்டி அருகே உள்ள மடத்துபட்டியில் நூலகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறாதால் நூலகத்தின் மேற்கூரை பெயந்து விழுந்து வருகிறது. இதனால் வாசகர்கள் உள்ளே அமர்ந்து படிக்க அச்சமடைகின்றனர். இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கட்டிடம் முழுவதும் சேதம் அடைவதற்குள் கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்