குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

காரையூர் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-09 18:48 GMT

காரையூர் அருகே உள்ள ஆவாம்பட்டியில் இருந்து படுதினிப்பட்டி வழியாக சடையம்பட்டி வரை தார்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இச்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் மண் சாலை போல் காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இவர்கள் குண்டும், குழியுமான சாலையில் அவ்வப்போது கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்