வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க கோரிக்கை

வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

Update: 2022-12-15 18:45 GMT

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் கண்ணையா மற்றும் விவசாயிகள் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் 2 கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆலங்குளம், ராஜகோபாலபேரி, ஊத்துமலை ஆகிய கிராமங்களை சுற்றி உள்ள மலையடிவாரங்களில் காட்டுப்பன்றிகள் பெருமளவில் உள்ளன. இவை இந்த கிராமங்களை சுற்றி உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுப்பன்றியால் பாதிக்கப்பட்ட ராஜகோபாலபேரி, அச்சங்குட்டம், வாடியூர், வீராணம், ஊத்துமலை ஆகிய கிராமங்களில் உள்ள எந்த ஒரு விவசாயிக்கும் இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. வனத்துறை அதிகாரிகள் ஒரு முறை கூட ஆய்வு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

வீ.கே.புதூர் தாலுகா ஊத்துமலை கிராமத்தில் 149 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் உள்ள கரம்பை மண் எடுக்க அரசாங்க சான்று பெறப்பட்டு கரம்பை மண் எடுக்காமல், விவசாய நிலங்களுக்கு இடாமல், கனிமவள வண்டல் மண் மற்றும் தாது மண் குளத்தின் அடிப்பகுதியில் எடுக்காமலும் ஓடை பகுதியில் மழை வெள்ளம் வரக்கூடிய ஓடையில் தாது மணல் எடுத்து வியாபாரமாக செய்கிறார்கள். இதுகுறித்து கடந்த முறை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் வண்டல் மண் மற்றும் தாது மணல் எடுத்த நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்