ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-17 18:53 GMT

சிவகாசி,

பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பஞ்சாயத்தின் பொறுப்பு தலைவர் ராஜபாண்டியன், சிவகாசி தாசில்தார் லோகநாதனிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழதிருத்தங்கல் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் சிவகாசி மாநகராட்சி எல்லை முதல் காமராஜர் காலனி, முத்தாட்சிமடம் வரை உள்ள சாலையில் இருபக்கமும் கழிவுநீர் வாருகால் மற்றும் சாலை அமைக்க வேண்டி உள்ளது. ஆனால் அந்த பகுதியில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு இருப்பதால் வளர்ச்சி பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்டு தர வேண்டும். மேலும் அந்த பகுதியில் உள்ள தியேட்டர் அருகில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையை சுற்றி உள்ள பகுதியிலும் சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக தெரிகிறது. இதனை சர்வே செய்து கொடுத்தால் கழிவுநீர் வாருகால் கட்டும் பணியை உடனே தொடங்க வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்