சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பச்சையாபுரம் காளியம்மன் கோவில் தெருவில் சேதமடைந்த மின்கம்பத்தால் தெருவிளக்கு அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்ள சேதமடைந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயநிலையில் உள்ளது. ஆதலால் மின்கம்பம் சாய்ந்து விழுந்து உயிர்பலி எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக அதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.