சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை
சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாயில்பட்டி,
தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மண்குண்டம்பட்டி ராமசாமி நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்ததால் அதில் இருந்த தெருவிளக்கு அகற்றப்பட்டு விட்டது.
இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பமும், தெருவிளக்கும் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.