செம்பனார்கோவிலுக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை

செம்பனார்கோவிலுக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது

Update: 2022-07-24 16:09 GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பொறையாறு போக்குவரத்து கிளை மேலாளரிடம் ஒரு  மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கடையூரில் இருந்து டி.மணல்மேடு, ஒடக்கரை, நட்சத்திரமாலை, காடுவெட்டி, நடுவலூர், இரவணையன்கோட்டகம், கண்ணங்குடி, கிள்ளியூர், ராமன்கோட்டகம், வெள்ளத்திடல், கீழ்மாத்தூர் போன்ற பகுதிகளில் மாணவ-மாணவிகள் பள்ளி-கல்லூரிக்கும், பொதுமக்கள் வேலை விஷயமாக திருக்கடையூர், செம்பனார்கோவில் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். திருக்கடையூரில் இருந்து கிள்ளியூர் வழியாக செம்பனார்கோவில் வரை மினி பஸ் இயக்கப்பட்டது. ஆனால், கடந்த 3 மாதமாக அந்த மினி பஸ் நிறுத்தப்பட்டது. ஆகவே, பொதுமக்கள் குறிப்பாக மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே, திருக்கடையூரில் இருந்து செம்பனார்கோவிலுக்கு அரசு பஸ் இயக்கினால் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் பயன்பெறுவர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.




Tags:    

மேலும் செய்திகள்