நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

திருக்காட்டுப்பள்ளயில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Update: 2022-08-07 21:08 GMT
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்துளை கிணற்று தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை செய்திருந்தனர். கல்லணை தொடங்கி விண்ணமங்கலம் வரை 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல் செய்யப்பட்டிருந்த முன்பட்ட குறுவைப் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் சில கிராமங்களில் நடைபெற்றும் வருகிறது.

ஆனால், கடந்த சில நாட்களாக திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விட்டு,விட்டு மழை பெய்து வருவதால் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளன. சில கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை பயிர்கள் வயலில் சாய்ந்து உள்ளன. தொடர்ந்து மழை பெய்தால் சாய்ந்துள்ள குறுவை பயிர்கள் முளைத்து விடக்கூடிய அபாய நிலை உள்ளது என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நெல் கொள்முதல் நிலையம்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வருவதால் விவசாயிகள் முன்பட்ட குறுவை அறுவடை பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல் சற்று ஈரமாக உள்ளதால் அதனை காய வைக்கும் பணியும் நடந்து வருகிறது.

தற்போது மழை விட்டு உள்ளதால் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட நெல்லின் ஈரப்பத அளவை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.





Tags:    

மேலும் செய்திகள்