பள்ளி புதிய கட்டிடத்தை திறக்க கோரிக்கை

பள்ளி புதிய கட்டிடத்தை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

Update: 2023-07-27 18:45 GMT

ராஜபாளையம், 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரம் காமராஜ் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் சேதமாக இருந்தது. இதை புதுப்பிக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து குழந்தை நேய பள்ளி கூட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 2 ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டப்பட்டது.

கட்டிட பணிகள் நிறைவடைந்து 2 மாதங்கள் ஆகியும் இன்னும் வகுப்பறைகள் திறக்கப்படாமல் உள்ளதால் அங்கு பயில வேண்டிய 43 மாணவ, மாணவிகள் தற்போது வரை மரத்தடியிலேயே அமர்ந்து படித்து வருகின்றனர். இப்பகுதியில் குற்றாலம் சீசன் தொடங்கி விட்டதால் பெய்து வரும் சாரல்மழை காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே உடனடியாக வகுப்பறை கட்டிடத்தை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்