அரக்கோணம் ெரயில் நிலையத்தில் தானியங்கி படிக்கட்டுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

அரக்கோணம் ெரயில் நிலையத்தில் தானியங்கி படிக்கட்டுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என ரெயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-08 18:45 GMT

அரக்கோணம்

அரக்கோணம் ெரயில் நிலையத்தில் தானியங்கி படிக்கட்டுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என ரெயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்ட ரெயில்வே மேலாளரை அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனாமாசிலாமணி தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுஅளித்தனர்.

அதில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை மற்றும் செங்கல்பட்டுக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்க வேண்டும். அரக்கோணத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 6-வது மற்றும் 7-வது நடைமேடையில் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் தானியங்கி நகரும் படிக்கட்டுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.

அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை மற்றும் ரேணிகுண்டாவுக்கும் இடையே மூன்றாவது ரெயில் பாதையும், அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு இரண்டாவது ரெயில் பாதையும் அமைக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக அப்போது சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் கூறியதாக ரெயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி தெரிவித்தார்.

======

Tags:    

மேலும் செய்திகள்