ஒப்பந்த சாலை பணி ஆபரேட்டர்களை நலவாரியத்தில் சேர்த்து பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை

ஒப்பந்த சாலை பணி ஆபரேட்டர்களை நலவாரியத்தில் சேர்த்து பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-24 19:36 GMT

தமிழ்நாடு ஒப்பந்த சாலை பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மன்னார்புரத்தில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார். மாநில செயலாளர் ரமேஷ், சங்க சட்ட ஆலோசகர் வக்கீல் சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு தலைவர் திரிசங்கு சிறப்புரையாற்றினார். நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணிகளை பேக்கேஜ் முறையை ரத்து செய்து, ஒப்பந்ததாரர்களுக்கு பணி கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது. ஒப்பந்த சாலை பணி ஆபரேட்டர்களுக்கான வாகன ஓட்டுனர் உரிமத்தை அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழங்க வேண்டும். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள், பழுது பார்க்கும் தொழிலாளர் நலவாரியத்தில் ஆபரேட்டர் மற்றும் ஓட்டுனர் பணிகளையும், பழுது பார்க்கும் பணிகளையும் செய்து வருபவர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்து பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்