சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை தமிழில் நடத்த கோரிக்கை

சங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை தமிழில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-08-21 19:33 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் தென் தமிழகத்தின் புகழ்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்று. இக்கோவிலில் கும்பாபிஷேக வேலைகள் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் கோஷங்கள் எழுப்பியபடி கோவில் அலுவலகத்தில் உள்ள ஊழியர் கணேசனிடம் கும்பாபிஷேகம் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று கூறி மனு அளித்தனர். அப்போது, வீர தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் முருகேசன், நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தங்கவேல், தென்காசி பாராளுமன்றச் செயலாளர் அருண்சங்கர், வீர தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், சங்கரன்கோவில் நகர நிர்வாகி மகேந்திரன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்