கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தேர்வை பெரம்பலூரில் நடத்த கோரிக்கை

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தேர்வை பெரம்பலூரில் நடத்த கோரிக்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2023-09-27 18:23 GMT

பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில், பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த பயிற்சி நிலையத்தின் இறுதி தேர்வு அட்டவனை தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தேர்வு நடைபெறும் இடம் பெரம்பலூருக்கு பதிலாக லால்குடி என்று வாய்மொழியாக கூறப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மேற்கண்ட தேர்வு பெரம்பலூரில் தான் நடைபெற்றது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 6-ந்தேதி வரை லால்குடி சென்று வந்தால் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வினியோகம் பாதிப்பு ஏற்படும் என்பதாலும், ரேஷன் கடை பணியாளர்களின் சென்று வருவதில் சிரமம் ஏற்படும் என்பதால் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி தேர்வினை பெரம்பலூரில் நடத்திட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்