உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை

உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

Update: 2023-07-01 18:45 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே ராமலிங்கபுரம் பஸ் நிறுத்தம் மெயின் ரோடு வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வழியாக இக்கூட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. தற்போதும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், ெபாதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி கவுன்சிலர் சசிகலா முருகன் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் பதிக்கப்பட்ட தண்ணீர் குழாயானது வலுவிழந்த நிலையில் இருப்பதால் தண்ணீர் அழுத்தம் காரணமாக விரிசல் உண்டாகி உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால் சாலை சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். மேலும் கிராம மக்கள் குடிதண்ணீர் இன்றி சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் குறித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, புதிய குழாய்களை பதிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்