சிவகாசி சிவன் கோவில் மாடவீதியை சீரமைக்க கோரிக்கை

சிவகாசி சிவன் கோவில் மாடவீதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-24 19:06 GMT

சிவகாசி, 

சிவகாசி சிவன் கோவில் மாடவீதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாட வீதிகள்

சிவகாசி நகரின் மையப்பகுதியில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் உள்ள மாடவீதிகளில் 3 பகுதிகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த கூட முடியாத அளவுக்கு சேதமடைந்து காணப்படுகிறது.

மேலும் தள்ளுவண்டிகளின் ஆக்கிரமிப்பால் அந்த பகுதியை கடந்த செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் உள்ள தற்காலிக கடைகளை அகற்றிவிட்டு அங்கு வாகன நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். பஜாரில் உள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இன்றி தவித்து வருகிறார்கள். பலர் கடைகளின் முன்பு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆக்கிரமிப்பு

இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சிவகாசி சிவன்கோவில் பகுதியை ஆய்வு செய்து அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும். சேதமடைந்துள்ள மாட வீதிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்