குதிரை கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வார கோரிக்கை
ஆரணி பையூர் ஏரிக்கு தண்ணீர் வரும்ஆரணி பையூர் ஏரிக்கு தண்ணீர் வரும் குதிரை கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆரணி
ஆரணி பையூர் ஏரிக்கு தண்ணீர் வரும்ஆரணி பையூர் ஏரிக்கு தண்ணீர் வரும் குதிரை கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆரணியில் உள்ள பையூர் ஏரி 150 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரியாக விளங்குகிறது. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு பையூர் ஏரிக்கு கமண்டல நாக நிதி ஆற்றில் இருந்து குதிரை கால்வாய் எனப்படும் கால்வாய் வழியாக ஏரிக்கு தண்ணீர் சென்றது. நாளடைவில் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதால் தற்போது பெயரளவில் கால்வாய் இருந்து வருகிறது.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சேவூர் - முள்ளிப்பட்டு பைபாஸ் சாலையில் கமண்டல நாக நதி ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டது. ஆனால் பையூர் ஏரிக்கு செல்லக்கூடிய குதிரை கால்வாய் கால்வாய் சரி செய்யப்படவில்லை.
பையூர் ஏரிக்கு செல்லக்கூடிய தண்ணீர் குதிரை கால்வாய் தடுப்பணை மூலமாக வெளியேறி மீண்டும் ஆற்றிலேயே கலக்கும் அவல நிலை இருந்து வருகிறது, பொதுப்பணித்துறையினர் பையூர் ஏரிக்கு செல்லக்கூடிய குதிரை கால்வாயில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆற்று தண்ணீர் செல்லக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் மட்டும் உயரம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்..