சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற கோரிக்கை
சேதமடைந்த மின்கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் அருகே சத்திரரெட்டிப்பட்டியில் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து நான்கு வழிச்சாலை வரை உள்ள சாலையில் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. மேலும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளிலும் ஏராளமான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்து விபரீதங்கள் எதுவும் நேருவதற்கு முன்பாக சேதமடைந்துள்ள இந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.