கல்வி, வேலை வாய்ப்பில் சலுகைகள் பெற உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுகோள்
கல்வி, வேலை வாய்ப்பில் சலுகைகள் பெற உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்துக்கு நிர்வாகிகள் தேர்வு மற்றும் பதவி ஏற்பு விழா நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் நடேசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கம்பம் ராஜன், பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக ரவிச்சந்திரனும், செயலாளராக மணிகண்டனும், பொருளாளராக இருந்த கோவிந்தராஜீம் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் பதவி ஏற்று கொண்டனர். மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கல்வி, வேலை வாய்ப்பில் அரசு சலுகைகள் பெற உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய நிர்வாகிகள் தொழிலாளர் நல வாரியத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்து அரசு உதவி தொகையினை பெற்று வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டன.