சூளகிரி பகுதியில் தக்காளி செடிகளில் நோய் தாக்குதல் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

Update: 2023-06-05 04:45 GMT

சூளகிரி:

சூளகிரி பகுதியில் தக்காளி செடிகளில் நோய் தாக்குதலால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தக்காளி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் புதினா, கொத்தமல்லி, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் பயிரிடப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினசரி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதற்கிடையே தற்போது ஒரு வாரமாக தக்காளி வரத்து குறைந்துவிட்டதால் அதன் விலை சற்று அதிகரித்தது.

விவசாயிகள் கவலை

இந்த நிலையில் சூளகிரி அருகே மருதாண்டபள்ளியை சேர்ந்த பாப்பண்ணா உள்ளிட்ட சில விவசாயிகளின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி அறுவடைக்கு தயாரான நிலையில் திடீரென மர்ம நோய் தாக்கியது. இதில் தக்காளி செடிகள் வாடி போனது. இதனால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்