சுப்பன் கால்வாய் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

சுப்பன் கால்வாய் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-07 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி வட்டார விவசாயிகள் சுப்பன் கால்வாய் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் சட்டப்பேரவையில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சுப்பன் கால்வாய் திட்டத்தை விரிவுப்படுத்த கேட்டு கொண்டார். அரசு அதற்கான முதல் கட்ட நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் நிதியாண்டில் கூடுதல் நிதியினை ஒதுக்கி சுப்பன் கால்வாய் திட்டத்தினை நீடித்து திருவள்ளூர் கிராமம் வழியாக பெரிய கண்மாய், கண்ணமங்கலம், சாத்தனி ஒச்சந்தட்டு, திருவள்ளூர் சின்ன கண்மாய் வழியாக பூச்சியேந்தல் பகைவரை வென்றான், அரனையூர், சாலைக்கிராமம் கண்மாய் வரை சுப்பன் கால்வாயை விரிவாக்கம் செய்யவும், பார்த்திபனூர் மதகு அணையின் இடதுபுற கால்வாயில் இருந்து நெட்டூர் கண்மாய்க்கு மேற்கே புதிய கால்வாய்களை உருவாக்கவும், திருவள்ளூர் மற்றும் அதனை சார்ந்த கண்மாய்களை வைகை நீர் பாசன பங்கீட்டில் சேர்க்கவும், கோவில் குளங்களை பராமரித்து தூர்வாரி சுற்றுச்சுவர் எழுப்பி நடைபயிற்சி பாதையுடன் இரும்பு வேலி அமைத்திடவும், இளையான்குடி புதூர் வழியே சோதுகுடி, கலங்காதன்கோட்டை, கிராம சாலைகளை இணைத்து கிழக்கு கடற்கரை சாலை வரை நீட்டிப்பு செய்து இரு வழிச்சாலையாக மாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என இளையான்குடி வட்டார கிராமங்களின் தன்னார்வலர்கள் குழு மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்