பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்-ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2023-01-29 18:45 GMT

சிவகங்கை,

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது.

பாெதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பிரம்மநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசபரோஸ், ஞானஅற்புதராஜ், குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர்கள் சகாயதைனேஸ், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர்கள் ஜோசப், ரமேஷ்குமார், மாவட்ட துணை தலைவர்கள் ரவி, ஸ்டீபன், துணை செயலாளர்கள் ஜான் அந்தோனி, அமலசேவியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஆசிரியர் பணியிட மாறுதல்கள் விதிகளுக்கு முரணாக நடைபெற்று வருகிறது. வெளிப்படையான கலந்தாய்வை நடத்துவதை விட்டு ஆசிரியர் பணியிடங்கள் விலை போகும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும்.விலையில்லா பொருட்களை பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டம்

இரண்டு இலக்க மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாற்று பணி வழங்குவதை கைவிட வேண்டும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆசிரியர்களுக்கு சிகிச்சை செலவை முழுமையாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களில் கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும், புத்தக திருவிழா நடத்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்