ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாசில்தாரிடம் மனு

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தாசில்தாரிடம் மனு ெகாடுக்கப்பட்டது.;

Update: 2022-11-04 18:45 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை அருகே உள்ள அரியனேந்தல் மற்றும் செலுவத்தி கிராம மக்கள் தேவகோட்டை தாசில்தாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- சிறுவத்தி ஊராட்சி அரியனேந்தல் கிராமத்தை சேர்ந்த 2 பேர் நீர்நிலை புறம்போக்கான கண்மாய் கரையில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதற்கு மின் இணைப்பும் பெற்றுள்ளனர். அதோடு ஒரு கொட்டகையும் அமைத்துள்ளனர். கரையை ஆக்கிரமித்துள்ளனர். மேலும் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. எனவே வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும், ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..இந்த மனுவின் நகல் முதல்-அமைச்சருக்கும், கலெக்டருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்