பொள்ளாச்சி பகுதியில் குடியரசு தின விழா:சப்-கலெக்டர் பிரியங்கா தேசியக்கொடி ஏற்றினார்

பொள்ளாச்சி பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சப்-கலெக்டர் பிரியங்கா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-01-26 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சப்-கலெக்டர் பிரியங்கா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

குடியரசு தின விழா

நாடு முழுவதும் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், தாசில்தார் வைரமுத்து, ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் தணிகைவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வைரமுத்து தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.

நகராட்சி அலுவலகம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து காந்தி உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், டிரைவர், தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பொள்ளாச்சி வனத்துறை அலுவலகத்தில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவா தேஜா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வனச்சரகர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆனைமலையில் உள்ள பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் புகழேந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த விழாவில் தலைமை டாக்டர் (பொறுப்பு) முருகபூபதி தேசிய கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். டாக்டர்கள், செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அரசு பள்ளிகள்

எஸ்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுசல்யா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப்பால் மாணிக்கராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் உதவி ஆசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.

பொள்ளாச்சியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மனோரஞ்சிதம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பொள்ளாச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை அலுவலகத்தில் நடந்த விழாவில் தலைவர் வெள்ளை நடராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இதில் கிணத்துக்கடவு தலைமையிடத்து துணை தாசில்தார் முத்து உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கருப்பசாமி பாண்டியன், செந்தில்குமார், ஜெகதீசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்